ஜனாதிபதி வேட்பாளர்கள் சம்பந்தனை சந்திப்பின் மர்ம பின்னணி என்ன?
ஜனாதிபதி தெரிவுக்கு முதல் நாள் இரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இ.ரா சம்பந்தனை ஜனாதிபதி வேட்பாளர்கள் சஜித் - டலஸ் நேரில் சென்று சந்தித்தனர்.
மேலும் குறித்த சந்திப்பில் தமிழ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின் போது இருவரும் தமக்கு ஆதரவு தரவேண்டும் என தமிழ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதன்பின்னர் டலஸ் அழகபெருமவுக்கு சிலர் ஆதரவு தெரிவிப்பதாகவும் சஜித் பிரேமதாசவுக்கு சிலர் அதரவு தெரிவிப்பதாக தெரிவித்தனர்.
மேலும் அந்த சந்திப்பில் ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் லம்பாக பணத்தை வாங்கியதுடன் அமைச்சு பதவிக்கும் ஆசைப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கேவிந்தன் கருணாகரன் (ஜனா) (G. Karunakaran) முகநூலில் பதிவிட்டுள்ளார்.