அதிபர் பணியில் சம்பளப் பிரச்சினைகள் ; பிரதமர் ஹரிணி வழங்கிய பதில்
அதிபர் பணிக்கான வெற்றிடங்கள் ஏற்கனவே அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பினும், பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளதாக பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிபர் பணியில் வேதனப் பிரச்சினைகள் மற்றும் பரந்த வேதன ஏற்றத்தாழ்வுகள் குறித்துக் கவலைகள் இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இந்த விடயங்கள் தொடர்பான முன்மொழிவுகள் வேதன ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில், ஆசிரியர் பணிக்கான வேதனத்தைக் கோரும் சில தனிநபர்கள் எதிர்ப்புகளின் மூலம் நியமனங்கள் வழங்கப்பட்டவுடன், அவற்றை ஏற்கவோ அல்லது இடமாற்றங்களை ஏற்கவோ அவர்கள் தயாராக இல்லை.
தனிப்பட்ட சிரமங்கள் இருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டாலும், தனிநபர்கள் முதலில் நியமனத்தை ஏற்றுக்கொண்டு கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும்.
அரசியல் தலையீடு, விரும்பிய இடத்தைப் பெற உதவும் என்ற தவறான கருத்து நிலவுகிறது, இது கல்வித் துறையில் நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது எனவும் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.