சஜித் பிரேமதாசவும் வெலிக்கடைக்கு விரைந்தார்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலை மருத்துவமனையில் உள்ள ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.
சிங்கப்பூருக்கு விஜயம்
சிங்கப்பூருக்கு விஜயம் செய்திருந்த சஜித் பிரேமதாச, தமது விஜயத்தை முடித்துக்கொண்டு நாட்டுக்குத் திரும்பியதையடுத்து ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடச் சென்றுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் நேற்றியதினம் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிம்ன்ற உத்தரவின் பேரில் விளக்கம்றியலில் வைக்கபப்ட்டுள்ளார்.
இந்நிலையில் உடல் சுகயீனம் காரணமாக அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரணிலை காண பல்வேறு அரசியல்வாதிகளும் சிறைசாலைக்கு சென்றுள்லதாக கூறப்படும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் இன்று ரணிலை நலம் விசாரிப்பதற்காக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.