ரணிலை காண விடியுமுன்னரே சிறைசாலைக்கு படையெடுத்த அரசியல்வாதிகள்!
சிறைச்சாலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட அரசியல்வாதிகள் பலரும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு விரைந்துள்ளதாக தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு
உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அவரது உடல்நலத்தை கருத்தில் கொண்டு ரணில் விக்ரமசிங்க தற்போது சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட இன்று காலை முதலே பல்வேறு அரசியல்வாதிகளும் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளனர்.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ அலவத்துவல, நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார உள்ளிட்ட பலரும் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளதாக அறியமுடிகிறது.
இந்த நாட்டின் வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.