பகலில் சஜித்துடன்... இரவில் ரணிலுடன் ; ஹிருணிகா விரக்தி
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர விரக்தி வெளியிட்டுள்ளார்.
கட்சியின் தலைமை இரட்டைமுகம்கொண்ட ஏமாற்றுக்காரர்களையே நம்புகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கியமக்கள் சக்தியின் பாம்புகள்
பகலில் சஜித்பிரேமதாசவுடன் இருந்துவிட்டு இரவில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவுடன் உணவருந்தும் இரட்டை முகம்கொண்ட ஏமாற்றுக்காரர்கள் கட்சியில் உள்ளதாகவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.
இவர்கள் ஐக்கியமக்கள் சக்தியின் பாம்புகள் ஆனால் கட்சிக்கு விசுவாசமானவர்களை நம்புவதற்கு பதில் கட்சி தலைமை இவர்களையே நம்புகின்றதாகவும் ஹிருணிகா பிரேமசந்திர கூறினார்.
ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த அனைவரும் தங்களிற்கு அமைச்சு பொறுப்பை வழங்க முன்வந்துள்ளனர் என தெரிவிக்கின்றனர், இவர்கள் மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டாலும் ஜனாதிபதியுடன் இணைந்துகொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் மனுசநாணயக்கார என்னை அழைத்தால் நான் ஏதாவது சொல்லிவிடுவேன் என்பதால் ஜனாதிபதி என்னை தொடர்புகொள்வதில்லை எனவும் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.