கடைசி நேரத்தில் பின்வாங்கிய சஜித்; காரணம் இதுவா!
ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் இருந்து எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச விலகியுள்ளமை தென்னிலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாது சஜித்தின் ஆதரவு மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளரான டலஸுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், சஜித்தை ஆதரித்தோரின் நிலை ? என்ன என கேள்வி எழும் அதேவேளை அத்தனை பேரும் டலஸ் பக்கம் மாறுவார்களா அல்லது அவர்களது தெரிவுகள் மாறுமா ? என்கின்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
அதே போல ரணிலை எதிர்ப்போர் மற்றும் கூட்டமைப்பு , காலிமுகத்திடல் போராட்டக்களம் உட்பட அததனை பேருமே டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்கப்போகின்றனரா? என்கின்ற கேள்வியும் இங்கு உள்ளது.
அதேவேளை ரணிலை எதிர்ப்பதும் தோல்வியடையச் செய்வதும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு டலஸுக்கான ஆதரவை வழங்குவதென்பது சாதுரியமான ஒன்றாக இருந்தாலும் டலஸ் என்பவரது பின்னணி ஒன்றும் ரணில், ராஜபக்சக்களை விட மேன்மையானவர் ஒன்றும் கிடையாது.
இந்நிலையில் தன்னால் வெல்லமுடியாது என்றவுடன் டலஸுடன் டீல் போட்டுக்கொண்ட சஜித் மீண்டும் பொறுப்பிலிருந்து தப்பியோடிய ஒரவராக பார்க்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் சஜித் பிரேமதாச , ராஜபக்சேக்களை ரணில் காப்பாற்றப்போகிறார் என்று வதந்திகளை கிளப்பிவிட்டு நேரடியாக ராஜபக்சக்களுக்கு ஆதரவளித்து அவர்களை காப்பாற்றும் இழி செயலுக்கு துணைபோகிறார் சஜித் என சமூகவலைத்தளங்களில் கடும் விசனம் முன்வைக்கப்பட்டுள்ளது.