இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யுனிசெப் சிறுவர் அமைப்பின் தெற்காசியாவிற்கான பிராந்திய நல்லெண்ண தூதுவராக இவ் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் அமைப்பான யுனிசெஃபின் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள அவர் சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கைக்கான தமது விஜயம் தொடர்பான அறிக்கையை அவர் வெளியிடுவார் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை கொவிட்-19 பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி என்பன நாடு முழுவதும் உள்ள சிறுவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக இலங்கையிலுள்ள யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.