ரஷ்யாவின் கொடூரம் : ஒரே இரவில் 600 உக்ரைன் வீரர்கள் பலி
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் நடத்திய பீரங்கி தாக்குதல்களில் ஒரே இரவில் 600 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.
நேற்றிரவு உக்ரைனின் இராணுவ நிலைகள் மற்றும் இராணுவ பலம் அதிகம் காணப்படும் இடங்களை குறிவைத்து ரஷ்ய துருப்புகள் தாக்குதல் நடத்திடத்தியதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் போது 600 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்துள்ள நிலையில், இரு தரப்பினர்களும் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளன.
இதேவேளை, ரஷ்ய துருப்புகள் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை தாக்குதல்களை நடத்தி பயிற்சி பெற்றதாக ரஷ்ய இராணுவ அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தப் பயிற்சியை ஏறத்தாழ 100 துருப்புகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலந்து மற்றும் லிதுவேனியா நாடுகளுக்கு இடையேயுள்ள பால்டிக் கடலில் நடந்த போர் பயிற்சியின்போதுதான் இந்த அணு ஏவுகணை தாக்குதல் பயிற்சியை ரஷ்ய துருப்புகள் எடுத்துக்கொண்டுள்ளனர்.
அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை மின்னணு முறையில் ஏவி தாக்குதல் நடத்தி பயிற்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தகவல்களுக்கு...
உக்ரைன் போருக்கு மத்தியில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சி தகவல்!