மின்னல் தாக்கி மயங்கி விழுந்த நபர் வைத்தியசாலையில்
நோர்வூட் பகுதியில் 15ஆம் திகதி புதன்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நோர்வூட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மற்றும் அருகிலுள்ள வீடு மீது மின்னல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டது அத்துடன் மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட அதிர்ச்சியில் வீட்டில் இருந்த ஒருவர் தரையில் மயங்கி விழுந்து காயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் மின் தடை
15ஆம் திகதி புதன்கிழமை மாலை 5:00 மணியளவில் வேன் நிறுத்துமிடத்திற்கு அருகிலுள்ள ஒரு பெரிய மரத்தில் மின்னல் தாக்கியதாகவும், பின்னர் வேன் மற்றும் வீடு மீது மோதியதாகவும் நோர்வுட் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து மழையுடன் இடி மின்னல் தாக்கியதால் நோர்வுட் பகுதியில் திடீர் மின் தடை ஏற்பட்டதாகவும் நோர்வுட் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல்நிலையால் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு.
இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் அடுத்த சில மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.