உக்ரைன் போருக்கு மத்தியில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சி தகவல்!
ரஷ்ய துருப்புகள் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை தாக்குதல்களை நடத்தி பயிற்சி எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை ரஷ்ய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தப் பயிற்சியை ஏறத்தாழ 100 ரஷ்ய துருப்புக்ள் எடுத்ததாக தெரிய வந்துள்ளது.
நேற்று முன்தினம் புதன்கிழமை (04-05-2022) போலந்து மற்றும் லிதுவேனியா நாடுகளுக்கு இடையேயுள்ள பால்டிக் கடலில் நடந்த போர் பயிற்சியின்போதுதான் இந்த அணு ஏவுகணை தாக்குதல் பயிற்சியை ரஷ்ய துருப்புகள் எடுத்துக்கொண்டுள்ளனர்.
அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை மின்னணு முறையில் ஏவி தாக்குதல் நடத்தி பயிற்சி பெற்றுள்ளனர்.
குறிப்பாக ஏவுகணை அமைப்பு லாஞ்சர்கள், விமான தளங்கள், பாதுகாக்கப்பட்ட உள்கட்டமைப்பு, ராணுவ தளவாடங்கள், எதிரியின் கட்டளை நிலைகள் ஆகியவற்றை செயற்கை இலக்குகளாக வடிவமைத்து இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தி ரஷிய படையினர் பயிற்சி பெற்றதாக ரஷ்ய ராணுவ அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த மின்னணு ஏவல் நடவடிக்கைக்கு பின்னர், ராணுவ வீரர்கள் சாத்தியமான பதிலடி தாக்குதல்களை தவிர்ப்பதற்காக தங்கள் நிலையை மாற்றுவதற்கான சூழ்ச்சிகளை மேற்கொண்டனர் என்றும் ரஷ்ய ராணுவ அமைச்சகம் கூறுகிறது.
இந்த தகவல்கள் உக்ரைன் போருக்கு மத்தியில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.