வீட்டுத் தோட்டத்தில் பிஸ்டல் மீட்பு; பொலிஸாரின் சந்தேகம்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'கரந்தெனிய சுத்தாவின் சகோதரரான 'கரந்தெனிய ராஜு' என்பவரது வீட்டுத் தோட்டத்தில் பிஸ்டல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அங்கு புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 9 மில்லிமீற்றர் ரக பிஸ்டல் ஒன்றும் 15 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

கரந்தெனிய ராஜுவினால் வழிநடத்தப்பட்ட பல கொலைச் சம்பவங்களுக்கு இந்தத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸ் மத்திய குற்ற விசாரணைஒ பணியகம் தெரிவித்துள்ளது.
கொலை உட்பட 15-க்கும் மேற்பட்ட குற்றங்களுக்காகக் காவல்துறையால் தேடப்பட்டு வந்த ராஜு, சமீபத்தில் இந்தியாவில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். இவர், மற்றொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.