கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறிய ரஷ்ய நாட்டு பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறிய ரஷ்ய நாட்டு பிரஜை ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று அவருடைய பயணப்பொதியை சோதனையிட்டபோது, அதிலிருந்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான "குஷ்" கைப்பற்றப்பட்டது.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 34 வயதான இவர் தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
மேலும், அவர் இந்த குஷ் போதைப்பொருளை பயிரிட்டு, தயாரித்து, உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் விநியோகம் செய்பவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் கொண்டு வந்த சூட்கேஸில் கடற்பாசியால் செய்யப்பட்ட தலையணையில் மறைத்துவைக்கப்பட்ட 01 கிலோ 50 கிராம் குஷ் போதைப்பொருள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.