ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு புதிய பேருந்துகள்
இந்த மாதம், ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு புதிய பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
வசதியான, செயல்திறனான மற்றும் தொடர்ச்சியான பொது போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு, ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து எட்டு புதிய பேருந்து வண்டிகளைப் பெறவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாதங்களுக்குள் மேலும் பல புதிய பேருந்துகள்
இதற்கு மேலதிகமாக, ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்குள், மேலும் பல புதிய பேருந்துகள் கிடைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதனூடாக பொதுப் போக்குவரத்தை வலுவாக மேம்படுத்தினால், வாகன இறக்குமதிக்கான செலவைக் கணிசமாகக் குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெருமளவிலான வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அதிகளவில் செலவழிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நகர்ப்புறங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஒரு பிரதான பிரச்சினையாக உள்ளதால், வீதியில் மனித நேரங்கள் வீணாகுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.