மனைவியை காப்பாற்ற ரஷ்யாவில் கடும் சிரமத்திற்கு ஆளான இலங்கை குடும்பஸ்தரின் கண்ணீர் கதை!
ரஷ்யாவில் மனித கடத்தலில் சிக்கி கடும் பாதிப்புக்குள்ளான நபரொருவர் தொடர்பலான செய்தி குருநாகல் - கும்புக்கெட்ட பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
ரஷ்ய போர்க்களத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, கடந்த 9ம் திகதி எரந்த சிந்தக தென்னகோன் என்ற குடும்பஸ்தர் இலங்கை திரும்பியுள்ளார்.
ரஷ்யாவில் வேறொரு வேலையில் ஈடுபட்டிருந்த வேளையில் ரஷ்ய கூலிப்படையில் இணைந்து போர்க்களத்தில் தலையில் துப்பாக்கிச்சூடுபட்டதாக அவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
ரஷ்யாவில் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பித்து நண்பர் ஊடாக இலங்கை வந்துள்ளார்.
ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவியின் அறுவை சிகிச்சைக்கு பணம் திரட்டுவதற்காக குறித்த நபர், ரஷ்ய கூலிப்படையில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இருப்பினும், அவர் நாடு திரும்புவதற்கு முன்பே அவரது மனைவி கடந்த மார்ச் மாதம் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.