யாழ்ப்பாணத்தில் 4 பேரை அதிரடியாக கைது செய்த கடற்படையினர்! நடந்தது என்ன?
யாழ்ப்பாண பகுதியில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 4 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் - வடமராட்சி, மாமுனை கடற்பகுதியில் இரவுவேளையில் கடலட்டைகளை பிடித்த 4 நபர்கள் இன்று (15-05-2024) கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அண்மைக் காலமாக சட்டவிரோத தொழில் முறைகளை தடுக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பலரை கைது செய்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாமுனை கடற்பகுதியில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 4 பேரையும் கடற்படை முகாம் அழைத்து வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ். கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.