யாழ்ப்பாணத்தில் வீடுகளை உடைக்கும் கொள்ளையர்கள்
யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதியில் காணிகளுக்குள் புகுந்து வீடுகளை உடைத்து இரும்புகள், கதவுகள், கதவு நிலைகள் என்பவற்றை களவாடி செல்கின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வலி வடக்கு பகுதியில் கடந்த 33 வருடங்களாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த தனியாரின் காணிகள் அண்மையில் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது.
பெரும்பாலான காணி உரிமையாளர்கள் வெளி பிரதேசங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசித்து வருவதால் அவர்களால் உடனேயே அக்காணிகளுக்குள் குடியமர முடியவில்லை.
அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள கொள்ளையர்கள், அந்த காணிகளுக்குள் புகுந்து வீடுகளை உடைத்து இரும்புகள், கதவுகள், கதவு நிலைகள் என்பவற்றை களவாடி செல்கின்றனர்.
இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பு மற்றும் பொலிசாரிடம் அறிவித்தும் கொள்ளையர்களைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.