பெற்றோரை ஏமாற்றி காதலனுடன் சென்ற மாணவி ; பொலிஸ் விசாரணை வளையத்தில் மாணவன் !
15 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் மாணவன் ஒருவனை கைது செய்ய புத்தளம் - ஆனைமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனைமடு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார். சந்தேக நபரான மாணவனும் அதே பாடசாலையில் கல்வி கற்கு வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாடசாலைக்கு செல்வதாக பொய் கூறி சென்ற மாணவி
பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவியும், மாணவனும் காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மாணவன் , மாணவிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து வெளியே செல்ல வருமாறு அழைத்துள்ளார்.
இதனையடுத்து மாணவி பெற்றோரிடம் பாடசாலைக்கு செல்வதாக பொய் கூறி ஆனைமடு பஸ் தரிப்பிடத்திற்கு சென்று பாடசாலை உடையை மாற்றிவிட்டு சந்தேக நபரான மாணவனுடன் இணைந்து வெளியே சென்றுள்ளார்.
இதன்போது சந்தேக நபரான மாணவன் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
சிறிது நாட்கள் சென்ற பின்னர் மாணவனுக்கும் , மாணவிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதை அடுத்து மாணவி தனக்கு நேர்ந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது தொடர்பில் ஆனைமடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்த நிலையில் மாணவனை கைது செய்ய ஆனைமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.