பேஸ்புக் களியாட்டத்தில் அரசியல் அதிர்ச்சி ; கைதானவர்களில் NPP முக்கியஸ்தரின் மகளும் பட்டியலில்
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் களியாட்டமொன்றை நடத்திக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டவர்களில், தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி பிரதி மேயரின் மகளும் இருந்தமை தெரியவந்துள்ளது.
தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த 26 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

அவர்களில் 22 ஆண்களும் 4 பெண்களும் அடங்குகின்றனர். இதன்போது 4,134 மில்லிகிராம் ஐஸ், 1,875 மில்லிகிராம் ஹேஷ், 2,769 மில்லிகிராம் குஷ், 390 மில்லிகிராம் கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் 18 முதல் 31 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் மற்றும் சந்தேகத்தில் கைதான பெண்களை இன்று (13) தெல்தெனிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி பிரதி மேயர் ருவன் குமாரவின் 26 வயதான மகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.