நாட்டில் அதிகரிக்கும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை
நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இவ்வருடத்தில் இதுவரை மொத்தம் 92,854 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் 49,163 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டத்தில் 19,778 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 18,433 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6,695 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த ஜூலை மாதத்தில் 29,964 என்ற எண்ணிக்கையில் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை கடந்துள்ள சில நாட்களில் மட்டும் 7,516 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், 96 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை தொடர்ந்து டெங்கு அதி-அபாய வலயங்களாக சுகாதாரப் பிரிவினர் பெயரிட்டுள்ளனர்.