பிரபல நடிகை மரணத்தில் சிபிஐ வளையத்துள் கணவன் மற்றும் மாமியார்!
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மொடல் அழகியும் நடிகையுமான த்விஷா சர்மாவின் மரணம் தொடர்பான வழக்கில், அவரது கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
த்விஷா சர்மா கடந்த மே 13ஆம் திகதி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் கட்டாரா மலைப்பகுதியில் உள்ள கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

வரதட்சணை தொடர்பாகத் துன்புறுத்தப்பட்டு கொலை
தனது மகள் வரதட்சணை தொடர்பாகத் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், அவர் வசித்து வந்த வீட்டின் சிசிரிவி காட்சிகளில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் த்விஷாவின் தந்தை நவ்நீதி சர்மா குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதனையடுத்து, தலைமறைவாகியிருந்த அவரது கணவர் சமர்த் சிங் மற்றும் முன்னாள் மாவட்ட நீதிபதியான சமர்த்தின் தாயார் கிரிபாலா சிங் ஆகியோருக்கு எதிராக பொலிஸார் வழக்குப் பதிவு செய்ததுடன், இருவரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தினர்.
இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த மத்திய புலனாய்வுத் திணைக்களம் (CBI), போபால் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
குற்றப்பத்திரிகையில், கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் தொடர்ச்சியாக ஏற்படுத்திய மன உளைச்சல் மற்றும் கொடுமைகள் காரணமாக த்விஷா சர்மா தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது