சட்டசபையில் காரசாரமான விவாதங்கள் ; திமுக வாயை அடைத்த முதலமைச்சர் விஜய்!
தற்போது தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் சட்டசபையில் தவெக எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு தவெக அமைச்சர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள் குறிப்பாக ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ் மோகன் ஆகியோர் திமுக எழுப்பும் கேள்விகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
திமுக எழுப்பும் கேள்விகளுக்கு பதிலடி
இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய் ‘தவெக அமைச்சர்கள் எந்த குற்றச்சாட்டுகளை சொன்னாலும் திமுக எம்.எல்.ஏக்கள் ஆதாரங்களை கொடு ஆதாரங்களை கொடு என்று கேட்கிறார்கள்’.
நிதியமைச்சர் மரிய வில்சன் ஏற்கனவே சொன்ன அந்த மூன்று கோப்புகளும் என்னுடைய டேபிளில்தான் இருக்கிறது.
அதை திறக்க வைத்து விடாதீர்கள்.. அத்தனைக்கும் ஆதாரம் இருக்கு.. மக்கள்கிட்ட என்ன, எப்போது, எப்படி பேசணும் என எல்லாம் எங்களுக்கு தெரியும்.
தேவையான நேரத்தில் அதை வெளியிடுவோம் என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். மக்கள் ஆசை ஆசையாக எங்களை இங்கே கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறார்கள். நான் பேசுவேன்.. பேசக்கூடாது என்றெல்லாம் ஒன்றும் இல்லை.
இடைத்தேர்தலில் சிலருக்கு ஏதாவது நல்ல நடக்க வேண்டும் அல்லவா!.. அதனால்தான் பேசாமல் இருக்கிறேன்’ என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.