குப்பைக்கு தீவைத்த புதுமண பெண் உயிரிழப்பு ; தமிழர் பகுதியில் பெரும் துயரம்
திருகோணமலை, நிலாவெளிப் பகுதியில் திருமணமான இளம் பெண் குப்பைக்கு தீவைத்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் நிலாவெளி இக்பால் நகரைச் சேர்ந்த 31 வயதுடைய இளம் யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த மே மாதம் 20ஆம் திகதி திருமணம் செய்துகொண்ட இவருக்கு, கடந்த 6ஆம் திகதி வீட்டு வளாகத்தில் குப்பைகளை எரியூட்டும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குப்பைகளை எரியூட்டுவதற்கு Paint Thinner
குப்பைகளை எரியூட்டுவதற்கு மண்ணெண்ணெய் கிடைக்காத காரணத்தால், வீட்டில் எஞ்சியிருந்த Paint Thinner திரவத்தைப் பயன்படுத்தியுள்ளார். அதிலிருந்து பரவிய தீ அவரது ஆடைகளிலும் பிடித்துள்ளது.
இதனால் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான அவர், முதலில் திருகோணமலை பொது வைத்தியசாலையிலும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த 14ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை Paint Thinner எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது. குப்பைகளை எரியூட்டுவதற்கு அதைப் பயன்படுத்தக் கூடாது எனபது பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.
இந்தச் சம்பவம் நமக்கு முக்கிய பாடங்களைக் கற்பிக்கின்றது. வீட்டில் எஞ்சியிருக்கும் திரவங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் அவதானம் தேவை.