நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது ; ஜனாதிபதி அநுரவுடன் சட்டத்தரணிகள் சங்கம் முக்கிய சந்திப்பு

Sri Lanka Police Anura Kumara Dissanayaka Sri Lanka Court of Appeal of Sri Lanka
By Sahana Aug 12, 2026 04:16 PM GMT
Report

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக வெற்றிகரமாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், அது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகளும் ஆலோசனைகளும் இங்கு முன்வைக்கப்பட்டன.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.

நீதியை நிலைநாட்டும் செயற்பாடானது நீதிமன்றங்களால் மாத்திரம் இடம்பெறுவதில்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது விசாரணைகள், வழக்குத் தாக்கல், நீதிமன்றம் ஆகிய அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த செயற்பாடாகும் என்றும், அதன்படி, அந்த செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் மனிதவளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது ; ஜனாதிபதி அநுரவுடன் சட்டத்தரணிகள் சங்கம் முக்கிய சந்திப்பு | Retirement Age Of Judges Important Meeting Anura

மேலும், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் பரவலாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், மக்களுக்கு நீதிமன்றச் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்காக மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீதிமன்றங்களுக்குத் தேவையான பௌதிக வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

எனவே, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது எல்லையை நீடிப்பது தொடர்பான முடிவு எந்தவொரு நபரையும் அல்லது குழுவையும் இலக்காகக் கொண்டதல்ல, மாறாக நாட்டின் பொது நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமாகும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்த சீர்திருத்தங்கள், முழுமையான கட்டமைப்புசார் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பரந்த மறுசீரமைப்புகளின் ஒன்று மாத்திரமேயாகும் எனவும், இது தனது தனிப்பட்ட கருத்து அல்லது அரசாங்கத்தின் தனிப்பட்ட கருத்து அல்ல எனவும் ஜனாதிபதி இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது எல்லையை நீடித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கொள்கை ரீதியான எதிர்ப்புகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், இந்தத் தீர்மானம் தொடர்பில் மேலும் ஆராய்ந்து ஏதேனுமொரு பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருவது பொருத்தமானது என்றும் பரி ந்துரைத்தனர்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய உட்பட அதன் சிரேஷ்ட பிரதிநிதிகள் பலர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US