துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு
ஹம்பாந்தோட்டை மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் இன்று (15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவராகக் குறிப்பிடப்படும் ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாயார் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த குறித்த பெண் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
துப்பாக்கிச் சூடு எதற்காக மேற்கொள்ளப்பட்டது, சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் விசாரணைகளின் பின்னர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.