நுவரெலியா வரலாற்றுச் சிறப்புமிக்க அஞ்சல் அலுவலகத்தில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்
வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா அஞ்சல் அலுவலகத்தின் கூரை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறைத் தலைவர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்துகுமாரா தெரிவித்துள்ளார்.
இந்தப் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், அஞ்சல் அலுவலகத்தின் தரைத்தளம் அஞ்சல் சேவைகள், முத்திரைப் பிரிவு, அருங்காட்சியகம், உணவகம் மற்றும் நினைவுப் பொருட்கள் விற்பனை மையம் ஆகிய வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் கட்டிடத்தின் மேல் தளத்தை சுற்றுலா மையமாக மாற்றும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையிலும், இலங்கை சுற்றுலா வாரியத்தின் வழிகாட்டுதலுடனும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அஞ்சல் துறைத் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.