முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை

CID - Sri Lanka Police Sri Lanka Police Colombo Ranil Wickremesinghe
By Sahana Jul 17, 2026 06:50 PM GMT
Report

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் பந்து அளவிலான ஆலங்கட்டி மழை

பிரான்சில் பந்து அளவிலான ஆலங்கட்டி மழை

சி.டி. விக்ரமரத்னவின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (17) காலை மாலபே, தலாஹேன பகுதியில் உள்ள தனது இல்லத்தில் வைத்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை | Intensive Investigation Into Death Of Former Igp

எவ்வாறாயினும், சி.டி. விக்ரமரத்ன தனது இல்லத்தில் வைத்துத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகப் பொலிஸார் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தனர்.

இன்று பிற்பகல் குறித்த இடத்திற்குச் சென்ற கடுவலை நீதவான், நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.

தற்போதைய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்துள்ளார்.

சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு, அதன் முன்னேற்ற அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இதன்போது கடுவலை நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் 35 வது பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய சி.டி. விக் ரமரத்ன, உயிரிழக்கும் போது 63 வயதாகும்.

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய 100 பேருந்துகள் சிக்கின

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய 100 பேருந்துகள் சிக்கின

1986 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்த அவர், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர் அவர் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். சி.டி. விக்ரமரத்ன 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி பதவியிலிருந்து ஓய்வு பெறவிருந்த போதிலும், புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பல சந்தர்ப்பங்களில் அவருக்குப் பதவிக் காலம் நீடிக்கப்பட்டதன் காரணமாக, மேலும் 08 மாதங்கள் வரை அவர் பொலிஸ் மா அதிபர் பதவியில் கடமையாற்றினார்.

இதன்படி, சி.டி. விக்ரமரத்ன 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிசில் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் கணிசமாக வீழ்ச்சி

சுவிசில் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் கணிசமாக வீழ்ச்சி

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US