எரிபொருள் விலை சூத்திரத்தால் நிவாரணம் ; மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர், விலைச்சூத்திரத்தில் அரசாங்கத்திற்கு கிடைக்கும் 4% ஈவுத்தொகையை குறைத்து அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்தார்.
பூஜ்ஜியத்திலிருந்து 4% வரை ஈவுத்தொகையைக் குறைப்பதன் மூலம் செலவுகளை மட்டுமே ஈடுசெய்யும் வகையில் விலை சூத்திரத்தை செயல்படுத்த நாங்கள் எண்ணியுள்ளோம்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், பிற LIOCகள் மற்றும் சினோபெக் ஆகியவற்றுடன் போட்டியிட அந்த 4% ஐப் பயன்படுத்த முயற்சிக்கிறோம்.
கடந்த ஆண்டு விலைச்சூத்திரத்தை அமுல்படுத்தியதால் பழைய கடனையும், வங்கிகளில் வாங்கிய கடனையும் ஈடுகட்ட முடிந்தது.
இதன் பயனை மக்களுக்கு வழங்குவதற்காக எதிர்காலத்தில் துரிதமாக செயற்படுவோம் என நம்புகின்றோம். என தெரிவித்தார்.