பிரித்தானியாவில் தமிழர்களின் பகுதியில் இளைஞன் செய்த செயல்; பல ஆண்டுகளாக தொடரும் அவலம்
பிரித்தானியாவில் தமிழர்கள் அதிகம் வாழும் சட்டன் கோல்ட்ஃபீல்ட் (Sutton Coldfield) பகுதியில், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஒருவரைப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
அதிகாலை 5 மணியளவில் வார்டன் (Warden) வீதியிலுள்ள ஒரு வீட்டில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. வீட்டின் கதவை இயந்திரம் மூலம் உடைத்து உள்ளே நுழைந்த பொலிஸார், 26 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கைது செய்தனர்

சமூக விரோதச் செயல்கள்
விற்பனை செய்யும் நோக்கில் போதைப்பொருள் வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சீருடை மற்றும் தலைக்கவசம் அணிந்த சுமார் 6 பொலிஸ் அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
குறித்த பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக இதுபோன்ற சமூக விரோதச் செயல்கள் நடப்பதாகவும், முன்னதாக 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் பொலிஸ் சோதனைகள் அங்கு நடந்துள்ளதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.