தவறான உறவு காரணமாக பெண் கொலை
வந்துரம்ப, நாதேவல பிரதேசத்தில் தவறான உறவு காரணமாக பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நாதேவல பகுதியில் கிளை வீதியில் பெண் ஒருவர் படுகாயமடைந்து விழுந்து கிடப்பதாக 119 தகவல் மையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேலதிக விசாரணை
அதன்படி, பொலிஸாரின் விசாரணையில், உயிரிழந்த நபருடன் தவறான உறவில் ஈடுபட்ட வந்த நபரே இந்தக் கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாதேவல, வந்துரம்ப பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலையை செய்த சந்தேக நபரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும், பின்னர் அவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வந்துரம்ப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        