காக்கிநாடாவைச் சேர்ந்த நால்வர் இலங்கையிலிருந்து விடுவிப்பு
இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட காக்கிநாடாவைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
படகில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகக் குறித்த கடற்றொழிலாளர்கள் நால்வரும் இலங்கை கடற்பரப்பில் நுழைந்தனர்.
இந்திய உதவி உயர்ஸ்தானிகர் அலுவலகம்
அதன்போது காங்கேசன்துறை அருகே அவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர்.
இந்நிலையில் அவர்கள் இன்றைய தினம் அவர்களது சொந்தப் படகிலேயே திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் நாளை மறுதினம் (13) காக்கிநாடாவை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஊடாக கடற்றொழிலாளர்கள் நால்வரும் அனுப்பி வைக்கப்பட்டதாக காக்கிநாடா நாடாளுமன்ற உறுப்பினர் டாங்கெல்ல உதய் ஶ்ரீனிவாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.