எரிபொருள் வரிசைகள் குறித்து ; சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்டிருந்த நம்பிக்கை அழிந்துவிட்டது," என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போர்ச்சூழல் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் தற்போது அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் உலகளவில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் போர் வெடிக்க ஆரம்பித்தவுடனேயே எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்று நாட்டு மக்கள் இரவு,பகலாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்று சபையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியிளத்துள்ளார்.
இந்த நிலையில் மத்திய கிழக்குப் போர் வெடித்த உடனேயே அரசாங்கம் சவால்களைத் தெரிவித்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்திருந்தால் பொதுமக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்பதைத் தடுத்திருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.