கனடாவில் மீன்பிடியில் ஈடுபட்டவருக்கு 6000 டொலர் அபராதம்
கனடாவில் மீன்பிடியில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு நீதிமன்றம் ஆறாயிரம் டொலர் அபராதம் விதித்துள்ளது.
அல்பர்ட்ட மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பான்ப் தேசிய பூங்காவில் கட்த்ரோட் ரக எட்டு மீன்களை பிடித்த நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ள.நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யூடியும் அலைவரிசை ஒன்றின் படப்பிடிப்பிற்காக குறித்த நபர் இவ்வாறு மீன்பிடியில் ஈடுபட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த கிரேக் ஓவன்ஸ் என்ற நபருக்கு நீதிமன்றம் இவ்வாறு தண்டனை விதித்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட மீன் வகை ஒன்றை பிடித்தார் என குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்படடுள்ளது.
தேசிய பூங்காவில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி அல்பர்ட்டா நீதிமன்றம் ஆறாயிரம் டொலர் அபராதம் விதித்துள்ளது.