தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம், மீளப் பெறப்படவேண்டும் என அக்கட்சியின் அம்பாறை மாவட்டக் கிளையின், முக்கியஸ்தர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமது கட்சிக்கு, கடந்த தேர்தலில் கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனத்தை, கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கத்திற்கு,கட்சியின் அரசியற்குழு வழங்க முன்வந்தமைக்கும் கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளார்.
கடந்த தேர்தலில் பின்னடைவுகளைச் சந்தித்த போதும், தமிழரசுக் கட்சியின் உட்கட்சி விவகாரங்களின் தொடரும் பிரச்சினைகளால், அக் கட்சிக்கு வாக்களித்த கிழக்கு மாகாண வாக்களார்கள் உட்பட பலரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
அத்தோடு, தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலரும், தேசியப் பட்டியல் தொடர்பில் பகிரங்கமாகக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.