புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நியமனம் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்கள்
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நியமனம் குறித்த விமர்சனங்கள் காண்கிறேன். புதியதொரு பாதையில் நாடு பயணிக்க மக்கள் ஆணை வழங்கி, இதுவரை ஆண்ட அனுபவம் இல்லாத ஒரு கட்சி பொறுப்பெடுத்திருப்பதாக ஊடகவியலாளர் ARV லோசன் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே விமர்சிக்க காலம் எடுத்துக்கொள்ள வேண்டும். இன அடிப்படையில் செய்யப்பட்டதல்ல, மாறாக துறைசார் அனுபவத்தின் அடிப்படையிலேயே இந்நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பதாக கொழும்பு மாவட்டத்தின் MPயாகத் தெரிவாகியுள்ள Dr.ரிஸ்வி சாலி தெரிவித்திருக்கிறார்.
எனவே இனி செயற்பாடுகளைத் தான் அவதானிக்கவேண்டும். 22 பேர் கொண்ட அமைச்சரவைக்கு முதலில் பாராட்டுக்களைச் சொல்லலாம். இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர்கள் ஆகியன இனிமேல் இல்லை என்றும் அறியவருகிறது. நல்ல மாற்றம்.
ஆனால் பிரதியமைச்சர்கள் நியமனம் 21 ஆம் திகதிக்குப் பின் இடம்பெறும்போது இப்போதைய முணுமுணுப்புக்கள் அரசியல்ரீதியாகத் தீர்க்கப்பட வாய்ப்பிருக்கு. (அரசியல் என்று வந்தால் இது சகஜமே) ஆனால் புத்த சாசன அமைச்சுப் பற்றி எழுந்துள்ள விமர்சனங்கள் - இது இந்த அரசாங்கத்திடமும் நான் எதிர்பார்த்ததே..
அதில் கை வைத்தால் என்ன நடக்கும் என்பது பற்றி ஜனாதிபதி AKDயும் அறிவார். என்னுடைய முன்னைய பல உரையாடல்களிலும் இதுபற்றி எச்சரித்தும் இருந்தேன்.
PTA பற்றிய NPPயின் நிலைப்பாடு எத்தகையதோ அதேபோல பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கும் அரசியலமைப்பின் 9ம் சரத்தை நீக்குவது பற்றிய அவர்கள் நிலைப்பாடும்.
எனவே ஆச்சரியமில்லை. 2/3 பெரும்பான்மையுடன் அவர்கள் 'இலங்கையர் அனைவருக்காகவும்' கொண்டுவரப்போகின்ற அடுத்த மாற்றங்களுக்காக காத்திருக்கிறேன்.