ராம நவமியில் உருவாகும் அரிய யோகங்கள்; இவர்களுக்கு அதிஸ்டமாம்!
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தின் சுக்ல பக்ஷ நவமி திதியில் ராம நவமி கொண்டாடப்பட்டு வருகிறது.
ராம நவமி என்பது ராமர் பிறந்த நாளாக கூறப்படுகிறது.அந்தவகையில் இந்த ஆண்டு ராம இன்று கொண்டாடப்படுகிறது.
கோவில்களில் சிறப்பு வழிபாடு
இந்நாளில் ராமல் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். விஷ்ணு பகவான் தர்மத்தை மீட்டெடுக்க ராமராக அவதரித்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் இந்து மதத்தில் ராம நவமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதுவும் 2023 ஆம் ஆண்டின் ராம நவமியாது இன்னமும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் மிகவும் அரிய யோகங்கள் உருவாகின்றன.
ராம நவமி நாளில் மீன ராசியில் சூரியன், புதன், குருவும், கும்ப ராசியில் சனியும், மேஷ ராசியில் சுக்கிரனும், ராகுவும் இருப்பார்கள்.
இந்த கிரகங்களின் நிலைகளால் மாளவ்யா, கேதார், ஹன்ஸ் மற்றும் மகாபாக்ய யோகங்கள் உருவாகும்.
இது மட்டுமின்றி சர்வார்த்த சித்தி, அமிர்த சித்தி, குரு புஷ்ய யோகம் மற்றும் ரவி யோகமும் இந்த ராம நவமி நாளில் வருகின்றன.
ஒரே நாளில் பல யோகங்கள்
இப்படி ஒரே நாளில் பல யோகங்கள் உருவாவதால், இந்த ராம நவமி நாளில் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கவுள்ளன.
அதிஸ்டம் பெறும் ராசிக்காரர்கள்
ரிஷபம்
2023 ஆம் ஆண்டின் ராம நவமி நாளானது ரிஷப ராசிக்கார்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது.குறிப்பாக நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, வலுவாகும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பல புதிய பொறுப்புக்களும் உங்களிடம் கொடுக்கப்படும். இந்நாளில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ராம நவமி நாளானது மறக்க முடியாத பொன்னான நாளாக இருக்கும். ஏனெனில் இந்நாளில் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த கடன் தொல்லையில் இருந்து விடுபடும் வாய்ப்புள்ளது.
புதிய வருமான ஆதாரங்களுக்கான வழிகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறனால் மரியாதை அதிகரிக்கும் மற்றும் உயர் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ராம நவமி நாளில் நிதி ரீதியாக மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக இந்நாளில் வருமானம் உயர்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
மேலும் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். முக்கியமான ராம பிரானின் ஆசீர்வாதத்தில் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.