அனுர அரசாங்கத்தை விரட்டியடிக்கவோ ,தோற்கடிக்கவோ முடியாது ;புகழும் ரஞ்சன் ராமநாயக்க
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க , ஜனாதிபதி அனுர அரசாங்கத்தை புகழ்ந்து கூறியுள்ளார்.
நாட்டின் த்சம்கால நிலமை தொடர்பில் ஊடகங்களிடம் கூறிய அவர்,

இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கவோ ,தோற்கடிக்கவோ முடியாது
முன்பு இருந்தவர்களுடன் ஒப்பிடும்போது, இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கவோ அல்லது தோற்கடிக்கவோ போதுமான அளவு தவறு எதுவும் இல்லை. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் இந்த அரசாங்கம், அவர்களை விட 100 சதவீதம் சிறந்தது என்பது எனது நேர்மையான கருத்து.
திருடர்கள் பிடிக்கப்படுகின்றனர். அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுள்ளன. இவற்றை நான் சாதகமாவே கருதுகின்றேன். அரச தரப்பினர் பொய் கூறுவதாக குற்றச்சாட்டு இருக்கிறது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது நண்பர் தவறு செய்தாலும் தண்டனை கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர். அதனால் அவர்களின் கட்சியில் ஊழல்வாதிகள் இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.
அப்படி இருந்தாலும் அவர் வெளியேற்றப்படுவார் என்பது எனது நம்பிக்கை என்றும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.