ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு “யுக புருஷர் ”
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு “யுக புருஷர் ” என அமைச்சர் நிமால் சிறிபால புகழாரம் சூட்டியுள்ளார். வின் செயற்பாடுகளையும், அவருடைய சிறந்த தலைமைத்துவத்தையும் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் எவ்வித தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால் நான் கூறியதன் உண்மையை கண்டுக்கொள்ளலாம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சவாலை துணிச்சலுடன் எதிர்கொண்ட “யுக புருஷர் ” தனது அரசியல் எதிர்காலம் பற்றியோ, வேறு எந்த விஷயத்தையோ யோசிக்காமல், சவாலை ஏற்றுக்கொண்டதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி ரணிலின் தலைமையின் கீழ் நாடு சிறப்பான திசையை நோக்கி பயணிப்பது தெளிவாக தெரிவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.