அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்போர் அவதானம்
நாட்டில் தற்போது பெய்து வரும் பலத்த மழைக்கு மத்தியில், அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் போது மின்சாரப் பலகைகளில் (Digital Boards) காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை வாசகங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை, சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக வாகனங்களின் முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரச் செய்து பயணிக்குமாறும், குறிப்பாக மணிக்கு 60 கிலோமீட்டர் வேக எல்லையை பேணி வாகனங்களை செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இரு வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியைப் பேணுமாறும், திடீரென பிரேக் பயன்படுத்தும் போது வாகனம் ஆபத்தான முறையில் வழுக்கிச் செல்லக்கூடும் என்பதால் அது குறித்து விழிப்புடன் அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்துமாறும் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.