கனடா ஆசை காட்டியவர் கம்பி எண்ணும் அவலம்!
கனடாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குச்சவெளி பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு கனடா வேலைவாய்ப்பு எனும் ஆசையைக் காட்டி 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளார்.

10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி
சந்தேக நபருக்கு எதிராக 7 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நீண்ட நாட்களாக தலைமறைவாகியிருந்த சந்தேக நபர், கடந்த 19ஆம் திகதியன்று குச்சவெளியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவருக்கு எதிராக நீர்கொழும்பு, மட்டக்களப்பு, அவிசாவளை நீதிமன்றங்களில் ஏற்கனவே இவ்வாறான வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைதானவர், மே 20ஆம் திகதியன்று திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை மே 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.