ஆஸ்திரேலியா வாழ் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி ரணில்!
நெருக்கடியில் உள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் தொடர்ச்சியாக இணைந்துகொள்ளுமாறு ஆஸ்திரேலியா வாழ் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில், ஆஸ்திரேலிய பேர்த் நகரில் வசிக்கும் ஆஸ்திரேலியா வாழ் இலங்கையர்களை இன்றையதினம் (09-02-2024) சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே மேற்படி அழைப்பை அவர் விடுத்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது மற்றும் நவீனமயப்படுத்துவது தொடர்பில் புலம்பெயர் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி ரணில் அறிவுறுத்தியு நிலையில் தொடர்ச்சியாக இணைந்துகொள்ளுமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இலங்கையைக் கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டத்தைப் பாராட்டிய புலம்பெயர் இலங்கையர்கள், காலநிலை, சுற்றுலா உள்ளிட்ட துறைகளின் அபிவிருத்திக்காக அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை, புலம்பெயர் இலங்கையர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஜனாதிபதி,
இலங்கையின் முன்னேற்றத்துக்காக நீண்டகால கொள்கைத் திட்டங்களைச் செயற்படுத்த அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படும் என்றும் தெரிவித்தார்.
தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுதல் உள்ளிட்ட புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் இதன்போது தெளியூட்டினர்.
புலம்பெயர் இலங்கையர்களுக்கான அலுவலகம் ஒன்றை பேர்த் நகரில் ஆரம்பிக்க அரசு தீர்மானித்திருக்கின்றது என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டிய நிலையில், இலங்கை புலம்பெயர் சமூகம் அதனூடாக அரசுடன் வலுவான முறையில் தொடர்புகளைப் பேண முடியும் என்றும் தெரிவித்தார்.