சர்வதேச ஊடகங்களில் முக்கியத்துவம் பிடித்த ரணில்
இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) குற்றப்புலனாய்பு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ரணில் கைதாச செய்தியை, உலக ஆங்கில இணையத்தளங்கள் பல , முக்கியத்துவம் வழங்கியுள்ளன.
அதேவேளை ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று (22) காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் ஜானதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதான சம்பவம் இலங்கையில் மட்டுமல்லாது உலக ஆங்கில ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்படுவதுடன் தலைப்பு செய்திகாகவும் மாறியுள்ளது.
அதேவேளை இலங்கை வரலாற்றில் குற்றப்புலனாய்பு திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முதல் முன்னாள் ஜானாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அறிய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



