சட்டத்தரணி, மனைவி பலதடவைகள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் ; சந்தேக நபர் தொடர்பில் ளெியான தகவல்
கொழும்பின் புறநகரான பத்தரமுல்ல - அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அக்குரேகொட பகுதியிலுள்ள சிறப்பு அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் வைத்து இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

தம்பதியினர் பலி
கார் ஒன்றில் வந்த குழுவினர் டி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுமார் 10 தடவைகள் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதில் வாகனத்தில் இருந்த தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் பிடிகல பகுதியைச் சேர்ந்த மல்வாரச்சி எனும் சட்டத்தரணியும் அவரது மனைவியும் ஆவர்.
இச்சம்பவம் குறித்து தலங்கம பொலிஸாரின் 3 குழுக்கள் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.