முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது; தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு
இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க இன்று (22) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார்.
ரணில் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு சென்ற பயணம் தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை தென்னிலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.