டிசம்பர் 29க்கு பின் நாட்டில் மழை தீவிரம் அதிகரிக்கும்
டிசம்பர் 29ஆம் திகதி முதல் நாட்டின் மீது கிழக்கு திசையிலிருந்து வீசும் அலைவடிவக் காற்றோட்டம் வலுப்பெறவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றத்தின் காரணமாக, எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் நிலைமை அதிகரிக்கும் என வெளியிடப்பட்டுள்ள விசேட வானிலை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழைத் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், வானிலைத் திணைக்களம் வெளியிடும் மேலதிக முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை கவனமாக பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.