2026 ஆம் ஆண்டு இதெல்லாம் நடக்குமா! பகீர் கிளப்பும் பாபா வாங்கா கணிப்புக்கள்!
2026 ஆம் ஆண்டை உலகம் மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராகி வரும் நிலையில், புத்தாண்டு பிறக்க இன்னும் சில நட்களே உள்ள நிலையில் பாபா வாங்கா கணிப்புக்கள் பகீர் கிளப்புவதாக உள்ளது.
பல்கேரியாவைச் சேர்ந்த பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா கூறியதாக சொல்லப்படும் 2026 தொடர்பான கணிப்புகள், தற்போது உலகம் முழுவதும் மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளன.

“பால்கன் நாடுகளின் நோஸ்ட்ரடாமஸ்” என அழைக்கப்படும் பாபா வங்கா, தனது வாழ்க்கைக் காலத்தில் கூறிய சில கணிப்புகள் உண்மையாக நடந்ததாக நம்பப்படுவதால், அவரது வார்த்தைகள் இன்றும் பலரைக் கலங்கடிக்கின்றன .
பாபா வங்காவின் 2026 கணிப்புகள்
பாபா வங்காவின் 2026 குறித்த மிகவும் அச்சமூட்டும் கணிப்பு, மூன்றாம் உலகப் போர் தொடர்புடையதாகும். உலகின் வல்லரசு நாடுகளுக்கிடையே நிலவும் அகந்தையும் அதிகாரப் போட்டியும், ஒரு பெரும் போராக வெடிக்கலாம் என அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக ரஷ்யா–அமெரிக்கா இடையேயான மோதல்கள், சீனா–தைவான் விவகாரம் போன்றவை இந்தப் போருக்கு அடித்தளமாக அமையும் என்றும், அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படும் அளவுக்கு இந்தப் போர் பயங்கரமாக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், 2026 நவம்பர் மாதத்தில் மனிதர்கள் விண்வெளி உயிரினங்களை (Aliens) நேரடியாக சந்திப்பார்கள் என்றும் பாபா வங்கா கூறியதாக தகவல்கள் பரவி வருகின்றன.
பூமியின் வளிமண்டலத்தில் ஒரு பெரிய, மர்மமான விண்கலம் நுழையும் என்றும், அது மனித வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பூமிக்கான அச்சுறுத்தலாக மாறுமா....
இந்த சந்திப்பு நட்பானதாக இருக்குமா அல்லது பூமிக்கான ஒரு அச்சுறுத்தலாக மாறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
1996ம் ஆண்டிலேயே இவர் உயிரிழந்துவிட்ட போதிலும், எதிர்காலம் குறித்த இவரது கணிப்புகள் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது.

அந்த வகையில் பாபா வங்கா இறப்பதற்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார்.
இவருடைய கணிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது 2026 ஆம் ஆண்டு கணிப்பு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.