18 ஆண்டுகள் கழித்து புதனுடன் இணையும் ராகு: இவர்களின் கஷ்டங்கள் தீர்ந்து, செல்வம் குவியப்போகுது
கிரகங்கள் அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து, சுப அல்லது அசுப யோகங்களையும் உருவாக்கி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறை அல்லது எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கும். அந்த வகையில் நிழல் கிரகமாக கருதப்படும் ராகு தற்போது சனி பகவானின் கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்த ராசிக்கு ராகு சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார். இந்நிலையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். அதுவும் பிப்ரவரி மாதத்தில் புதன் நுழையவிருக்கிறார்.

அதிர்ஷ்டம் பெறவுள்ள ராசிக்காரர்கள்
இதனால் பிப்ரவரி மாதத்தில் ராகு மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகள் கழித்து உருவாகிறது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளார்கள்.
மேஷம்: மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இதன் மூலம் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய முதலீடுகளை செய்தால், அதிலிருந்தும் இரட்டிப்பு லாபத்தைப் பெறக்கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பங்குச் சந்தையில் இருந்து எதிர்பாராத அளவில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இதனால் பண பிரச்சனைகள் தீரும். புது வீடு, வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மிதுனம்: மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவில் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். முக்கியமாக நீண்ட கால ஆசைகள் இந்த ராகு புதனின் சேர்க்கை காலத்தில் நிறைவேறும்.
கும்பம்: கும்ப ராசியின் முதல் வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களும் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக தன்னம்பிக்கை இருமடங்கு அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சொந்தமாக தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். அதே சமயம் பெயரும் புகழும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.