அதிஸ்ட்டத்தில் காத்திருந்த ஆபத்து ; கோடி ரூபாயால் நடந்த விபரீதம்
கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பரவூரை சேர்ந்த சாதிக் என்பவருக்கு கடந்த மாதம் 30ஆம் திகதி ரூ.1 கோடி பரிசு விழுந்தது.
அந்த பணம் கிடைப்பதற்கு தாமதம் ஆகும் என்பதாலும், கணிசமான தொகை வரியாக பிடிக்கப்படும் என்பதாலும் தனது சீட்டை அதிக தொகைக்கு விற்பனை செய்ய சாதிக் முயன்றுள்ளார்.

விசாரணைகள்
இதையறிந்த ஒரு குழுவினர் அவரிடம் இருந்து அதிக தொகைக்கு அதிஷ்ட இலாப சீட்டை பெற்றுக்கொள்வதாக கூறி சாதிக்கை பரவூர் நகருக்கு வரவழைத்துள்ளனர். அதை நம்பி தனது நண்பருடன் சாதிக் அங்கு சென்றார்.
அப்போது ஒரு வாகனத்தில் வந்த இந்த குழுவினர் இருவரையும் வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்டு சென்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிறிது தூரம் சென்றபிறகு சாதிக்கின் நண்பரை இறக்கி விட்ட அவர்கள், சாதிக்கை கடத்திச்சென்றதாகவும் பின்னர் அதிஷ்ட இலாப சீட்டை பறித்துக்கொண்டு இரவு 11.30 மணியளவில் சாதிக்கை இறக்கி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து பொலிஸில் சாதிக் முறைப்பாடளித்துள்ளார்.
பெண்களுக்கு போதைமாத்திரைகளை கொடுத்து நிர்வாண காணொளி ; பின்னணியில் வைத்தியர், தமிழர் பகுதியில் சம்பவம்
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடத்தல் குழுவுடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.
ஏனையவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.