யாழில் படையெடுத்த அரச பேருந்துகளால் சிக்கல் மாட்டிய ஜனாதிபதி அநுர ; வெடித்தது சர்ச்சை
ஜனாதிபதி தலைமையில் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று இடம் பெற்ற போதை ஒழிப்பு கூட்டத்திற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 70 பேருந்துகளில் பொது மக்கள் பல்வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.
யாழில் ஜனாதிபதியின் போதை ஒழிப்பு தேசிய வேலை திட்டத்தின் ஒரு பகுதியாக "முழு நாடுமே ஒன்றாக" என்கின்ற தேசிய செயற்பாட்டை ஆரம்பிக்கும் முகமாக 'அகன்று செல்' என்கின்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற கூட்டத்துக்கே இவ்வாறு அழைத்து வரப்பட்டனர்.

அசௌகரியங்கள்
இதன் காரணமாக யாழ் மாவட்டத்தில் உள்ளூர் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்வோர் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

யாழ் மாவட்டத்திலுள்ள இலங்கை போக்குவரத்து சாலைகளில் பேருந்து பற்றாக்குறைகள் இருக்கின்ற நிலையில் ஒரே தடவையில் இவ்வாறு அதிக பேருந்துகளை பொது நிகழ்வுகளுக்கு வழங்கியமை பொறுப்பற்ற செயல் என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
பெண்களுக்கு போதைமாத்திரைகளை கொடுத்து நிர்வாண காணொளி ; பின்னணியில் வைத்தியர், தமிழர் பகுதியில் சம்பவம்
இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண பொறுப்பு வாய்ந்த அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது யாழ் மாவட்ட செயலரின் கோரிக்கைக்கு இணங்க பேருந்துகளை விசேட கட்டணங்களில் அடிப்படையில் வழங்கியதாக தெரிவித்தார்