பிரேக் அப் செய்த காதலிக்கு ஹோட்டல் அறையில் ஆத்திரத்தில் இளைஞர் செய்த கொடூரம்
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இளைஞருடன் காதல் உறவில் இருந்துள்ளார். அதில் சமீபத்தில் காதல் முறிவு ஏற்பட, ராதாவுக்கு அவரது குடும்பத்தினர் வேறு ஒருவருடன், திருமணம் நிச்சயித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் காதலன் ஆத்திரம் அடைந்துள்ளார். இந்நிலையில், கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் எனக்கூறி இளம்பெண்ணை மீரட்டின் பரபரப்பான அபு லேன் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வழக்குப்பதிவு
அங்கு அறை எடுத்து தங்கியவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கி சித்ரவதை செய்துள்ளார். அப்போது இளம்பெண் செல்போனை பிடுங்கி வைத்து, உதவிக்கு அவர் யாரையும் அழைக்காதபடி செய்துள்ளார்.
ஒருக்கட்டத்தில் ஆக்ரோஷம் அதிமாகி சித்ரவதை கூடிக்கொண்டே போக இளம்பெண் போராடி ஹோட்டல் அறையில் தப்பி ஓடினார். ஆனால், அவரைப் பின்தொடர்ந்து வந்த காதலன், நடுரோட்டிலேயே மடக்கிப் பிடித்துள்ளார்.
தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி, மீண்டும் ஹோட்டலுக்குள் தூக்கிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது ராதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த கடைக்காரர்களும், பொதுமக்களும் ஓடிவந்து தடுத்துள்ளனர்.
இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம் ; தகாத உறவால் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு தந்தை செய்த மோசமான சம்பவம்
இதற்கிடையே, பொதுமக்கள் திரண்டு வருவதைப் பார்த்த சல்மான், ஹோட்டலின் மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து அருகிலிருந்த கட்டடத்துக்குத் தாவி தப்பிச் சென்றுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ராதாவை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அவரது புகாரின் அடிப்படையில், சல்மான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.