தமிழர் பகுதியில் மூன்று இளைஞர்கள் செய்த தகாத செயல் ; அதிகாலையில் அதிகாரிகள் அதிரடி
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளைப் பாவித்ததாகக் கூறப்படும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து மொத்தமாக 5 கிராம் 560 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, குட்டிக்கராச்சிப் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரிடமிருந்து 3,100 மில்லிகிராமும், பூவரசன்தீவைச் சேர்ந்த 29 வயதுடைய நபரிடமிருந்து 2 கிராம் 230 மில்லிகிராமும், மகரூப் நகரைச் சேர்ந்த 27 வயதுடைய நபரிடமிருந்து 230 மில்லிகிராமும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம் ; தகாத உறவால் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு தந்தை செய்த மோசமான சம்பவம்
இவர்கள் மூவரும் கிண்ணியா பைசல் நகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.